செயல் ஒன்று காரணம் வேறு

*******************

வரவேற்கவும்
மலர் தூவுகின்றனர்
வழியனுப்பவும் இறுதியாக
மலர் தூவுகின்றனர்...

நலம் விசாரிக்கவும்
கரத்தை பிடிக்கின்றனர்
துக்கம் விசாரிக்கவும்
கரத்தை பிடிக்கின்றனர்..

வாழ்த்திடவும்
மாலை அணிவிப்பு
மரணித்த உடலுக்கும்
மாலை அணிவிப்பு...

முதலிரவுக்கும்
மலர் அலங்காரம்
இறுதி ஊர்வலத்திலும்
மலர் அலங்காரம்...

கற்சிலைக்கும்
மாலையிட்டு மரியாதை
மனிதனுக்கும்
மாலையிட்டு மரியாதை..

பொருளும்
செயலும்
ஒன்றுதான்
காரணங்கள் வெவ்வேறு....

மனிதன் பிறப்பில் ஒன்றுதான்
ஆனாலும்
சாதிமதத்தில்
வெவ்வேறு...

என்னடா உலகம் இது?

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (11-Oct-17, 7:37 am)
பார்வை : 304

மேலே