கூடோடி

#கூடோடி...

எது உனது இருப்பிடம்/வசிப்பிடம்?

எங்கு நான் தற்போது அமர்ந்துள்ளேனோ,
எங்கு நான் தற்போது நடந்து செல்கிறேனோ,
எங்கு நான் தற்போது படுத்து உறங்குகிறேனோ,
அது என் இருப்பிடம்/வசிப்பிடம்..

அப்படியெனில் நாடோடியா நீ?

ஆம், நானும் நாடோடி. நீங்களும் நாடோடி..
தெளிவாகச் சொல்லுங்கள். நிரந்தரமான உங்கள் இருப்பிடம் எது?
இந்த உடலே சில காலம் நீங்கள் தங்கிவிட்டுச் செல்லும் கூடு...
நாம் அனைவருமே கூடோடிகள் தான்..

நீ கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாக பதில் சொல்கிறாய். உனக்கு தலைக்கனம் அதிகமாகவே இருக்கு என்று நினைக்கிறேன். இதைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்?

சில நேரங்களில் என் தலை கனத்து விடுகிறது. அவ்வாறு கனத்த நேரங்களில் என் தலையைத் தாங்க பிறர் உதவியைக் கேட்க எண்ணியிருக்கிறேன்...
ஆனால், பல வேளைகளில் என் தலை மிக இலோசாகி விடுகிறது...
நான் அதிகப்பிரசங்கித்தனமாக பேசுகிறேனென்று என் பெற்றோர் முதல் ஆசிரியர் வரை சொல்லாதவர்கள் இல்லை..
அந்த பட்டம் என்னை பாதிப்பதும் இல்லை...
பாதித்தாலும் கவலை அவசியமற்றது...
நரம்பில்லா நாக்கின் வார்த்தை நிரந்தரமில்லாதவை...
ஆத்மார்த்தமாக வெளிப்படும் வார்த்தைகள் நிரந்தரமானவை...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (15-Oct-17, 1:36 pm)
பார்வை : 392

மேலே