தத்துவ கீதம்

தனிமை கீதம் பாடினேன் தானியங்கு குயிலாய்...
தனிமை கீதமென்னவோ, தத்துவ கீதமானதேனோ?

பச்சை மரத்தில் பச்சை கிளிகளிரண்டு கொஞ்சும் அழகு கண்டு இதயம் ஈர்த்ததுண்டு என்னவொரு ஆன்ம பந்தமென்று...

இச்சை தீர்த்து மனிதர்கள் பிரிந்து செல்லும் கோலம் கண்டு கோபம் கொண்டதுண்டு கேவலமான நாய் காதல்களென்று...

வாழும் இந்த நிமிடமே நம்முடைய உரிமையென்று அறியாத பதர்களுக்கு அமைவதில்லை ஆரோக்கியமான எதிர்காலமொன்று...

புத்தியுள்ள பிள்ளை கற்பூரம் போல் சிந்தனை தீ பற்ற சூரியனாய் பிரகாசிப்பது கண்டு உள்ளமெச்சியதுண்டு உத்தம நெஞ்சம் வழி தவறுவதில்லையென்று...

அட்டை அடையாளம் கொண்டு, பணக் காகிதமென்று எழுத்துகள் பரிணமிக்கும் பெயருக்கும், புகழுக்கும்...

வினைப்பயனென்று வேதம் மொழிந்ததுண்டு மனக்குழப்பம் கண்டு...

உலகம் செல்லும் பாதையென்ன உண்மை பாதையா?
நானும் செல்வேனோ?

அறம் கொண்டு என்னைச் செதுக்கி சிற்பம் வடித்து மனம் சொன்ன பாதையே உண்மை பாதையென்று நானும் பயணிக்கத் தொடங்கிவிட்டேன் தனியனாய்...

ஈரத்தால் நமத்துப்போன கற்பூரங்களே! பற்றி எரிவீர்களோ சிந்தனை தீயால்?
மாறாய் விதியென்று நொந்து வாழ்வீரோ மன நோயால்??

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (15-Oct-17, 10:40 pm)
Tanglish : thathuva keetham
பார்வை : 1112

மேலே