எது கவிதை
எது கவிதை?
தமிழ் பற்றால்
ஒன்றிணைத்த
எழுத்துக்களின்
தொகுப்பா..
எது கவிதை?
கடவுளின் படைப்பை
கண்டு
எழுந்திடும்
உள்ளத்தின் நெகிழ்ச்சியா..
எது கவிதை?
ஆற்றிடும் கடமைகளின்
அணிவகுப்பா..
எது கவிதை?
என்னுள் புதைந்து
கிடந்த திறமையின்
வெளிப்பாடா..
எது கவிதை?
இதயத்தை
ஆக்கிரமைத்த
காதலின் பரிசா..
செதுக்கிய சிற்பம்
பேசிடாது
என தெரிந்தும்
எப்போது பேசும்
என காத்திருக்கும்
சிற்பியாய்
எது கவிதை
என தெரியாமல்
எழுதுகிறேன்
ஓர் அழகிய கவிதையை...!
நா.சதீஷ் குமார்