மீண்டும் ஓர் எச்சரிக்கை

சல்லிக்கட்டு என்பது என்ன? வீரம் என்பதை போதித்த ஓர் சரிதை! "பயமறியா" என்னும் சொல்லிற்கு சிறந்த சான்று! உண்மைத்தமிழனின் உன்னத அடையாளம்! இதற்கு கிடைக்காதா ஓர் விடிவுகாலம்?
இவ்வாறு ஏங்கும் தமிழ்மக்கள் ஏராளம்!
இதைத் தடுக்க நினைப்பவர்களோ தாராளம்! அவர்களுக்கு இருக்குமென நினைக்கிறேன் ஞாபகமறதி! அவன் குடிப்பதோ தோழனின் வெள்ளைக்குருதி! தடைச்சட்டம் எனும் தோட்டாக்கள் உடலைத் துளைக்கலாம்! உணர்வுகளை அல்ல! சட்டங்கள் பலஇருப்பது மகிழ்ச்சியின் வாடிவாசலை காணமட்டுமே! எங்கள் உணர்வுகளை அழித்து சங்கடங்கள் சங்கமிக்க அல்ல!
ஆற்றுவழி நாகரிகம் விட்டுச்சென்ற வரலாற்றைப் போற்றுவதே எங்கள் கடமை!
"ஓடி விளையாடு! கூடி விளையாடு!" தெரிந்த எங்களுக்கு "ரௌத்திரம் பழகு" நன்றாகவே தெரியும்! நீ எள்ளி நகையாட எதிர்க்கக் திறனில்லாதவரல்ல நாங்கள்! மண் என்பதை மணமாக்கி, மானம் என்பதை தனதாக்கி, இதோ! வீறுகொண்டு எழுந்துவிட்டது இளைஞர்படை! மெரினாவில் கடல்அலையைவிட இளங்காளையர் அலை! மதுரையில்கூடி மலைக்கச் செய்தனர்!
திருச்சியில்கூடி திகைக்கச் செய்தனர்! தமிழகமெங்கும் கூடி தலைநிமிரச் செய்தனர்! அதிர்ந்தது அரசு! அளித்தது அனுமதி! இருள்கிழித்து வரும் ஒளியைப்போல் காளைகள் பாய, எங்கள் இளங்காளையர் அடக்க, ரசிகர்கள் இன்பவெள்ளத்தில் மிதக்க, இனிதே முடிந்தது எங்கள் வீரவிளையாட்டு! இதற்கு மீண்டும் ஓர் தடைவந்தால், பொறுக்கமாட்டோம்! பொங்கி எழுவோம்! இளைஞர்களே! தமிழினத்திற்காக ஒன்றுபடுவோம்! வென்றுவிடுவோம்!

எழுதியவர் : க.யோகபாலாஜி (15-Oct-17, 5:30 pm)
சேர்த்தது : யோகபாலாஜி க
பார்வை : 777

மேலே