தீபாவளி
தீபாவளி
தீபங்களின் முத்துச் சுடர் விண்மீன்களை தரையிறக்க
விண்ணுயர்ந்த வேட்டுக்களின் ஒளி இரவை பகலாக்க
பளபளக்கும் பட்டுடைகள் வானவில்லுடன் போட்டியிட
சுவையுள்ள தின்பண்டங்கள் வாயில் கப்பலோட்ட
தரை இட்ட வெடி ஓசை வான் இடிக்கு சவால்விட
அதிகாலை விடியலின் அமைதி அன்று மட்டும் களவுபோக
அழகான உடைகளின் சலசலப்பும்
ஆரவார குழந்தைகளின் குதூகலமும்
அன்புள்ள முதியோரின் ஆசிகளும்
நரகனை அழித்த இந்நாளை தீபாவளியென
குவலயம் கொண்டாடிடுதே !

