நண்பனோடு போட்டி போடு
நண்பனோடு போட்டி போடு
தோல்விகள் வந்தால் நண்பன் ஏற்றுக்கொள்வான்,
வெற்றிகள் வந்தால் உனக்கே தந்துவிடுவான்...!
நண்பனோடு மனம்விட்டு பேசு
கவலைகள் என்றால் அவனும் அழுதுகொள்வான்,
மகிழ்ச்சி என்றால் அனைவரையும் சிரிக்கவைப்பான்...!
நண்பனோடு சேர்ந்து உறங்கு
பகலிலும் உன்னை உறங்கவைப்பான்,
இரவில் உனக்காக விழித்திருப்பான்...!
நண்பனோடு கை கோர்த்து செல்
உனக்காக வழியும் காட்டுவான்,
உனக்காக வழியும் விடுவான்...!
நண்பனோடு சேர்ந்து வாழ்
உனக்காக வாழவும் செய்வான்,
உனக்காக சாகவும் துணிவான்...!