எங்கிருந்து வந்தாய் நீ?

எங்கிருந்து வந்தாய் நீ?

எப்படி என்னுள் கலந்தாய்?




தொப்புள் கொடி உறவுகள் கூட

என்னை துறந்து போகும் வேலையில்...

தோல் கொடுக்கும் உறவுகளாய்

வந்து நிற்கிறாய்...



மாலை நேர மலர் போல்

துவண்டு நிற்கும் வேலையில்...

மீண்டும் மீண்டும் என்னை

துளிர்க்க வைக்கிறாய்...



என் கண்களில் நீர்

ததும்பும் முன்

என் உதடுகளில் புன்னகை

ததும்ப வைக்கிறாய்...



தோல்விகளுக்கு காரணம்

தேடிக்கொண்டிருக்கிறேன்...

வெற்றிக்கு காரணம்

நீயாக வந்து நிற்கிறாய்...



நான் மனம் குமுறும் நேரங்களில்

துன்பங்களை திருடிக்கொண்டு

மகிழ்ச்சியை மட்டும்

எனக்காக தருகிறாய்...



என் வாழ்கையை கிறுக்க

ஏடு தேடிகொண்டிருந்தேன்...

அன்பு எனும் மை கொண்டு

அழகான கவிதையாய் மாற்றினாய்...



எனக்கு ஒரு உயிர் தானோ

என்றிந்த நேரத்தில்...

எத்தனையோ உயிர்களை

எனக்காக தந்தாய்...



எனக்காக அத்தனையும் தந்தாய்...

உனக்காக நான் என்ன தரப்போகிறேன்?

என் உயிர் தவிர உனக்கு தர

வேறொன்றும் இல்லை என்னிடத்தில்...

எழுதியவர் : கார்த்திக் . பெ (20-Jul-10, 10:50 pm)
பார்வை : 726

மேலே