வருத்தம் தேவையில்லை

வார்த்தைகளில் ஆறுதல் தேடினால் கண்ணீர் வடித்தெடுத்து கண்ணாடி கோப்பையில் நிரப்பி
காலம் பருகிடும் இதயங்களுக்கு மத்தியில் பணமென்ற அதிகாரி கூட்டுவிக்கும் உறவினர்களால் கிட்டுமோ? என்று ஏங்கும் நெஞ்சே!
வருத்தம் தேவையில்லை,
வறுத்தெடுத்த நெஞ்சங்களுக்காக...

யாருமில்லா தனிமரச் சூழலில் வாழ்த்தாலும் வருத்தமுண்டாகி அழிக்குமே..
அழிவில்லை வருத்தமில்லா நெஞ்சிற்கு...

எதிர்பார்ப்புகள் எக்காளமிடும் எண்ணற்ற நேஞ்சங்களின் தேடலாய்,
பாதுகாப்பு, காதலிப்பு, நட்பு என்று சதம் தொட்டு வீதம் தாண்டிய அணிவகுப்பு...

உள்ளத்துள் புதைத்த ஆசைகளையெல்லாம் தட்டி எழுப்பி உயிர் கொடுக்கும் தைரியமுள்ள தகுதியான நெஞ்சம் வீழ்ந்தாலும் வாழ்ந்ததுண்டு வகுத்தெடுத்து...

மரணம் தரும் ஞானம் இறைவனிடமும் கிடைப்பதில்லை...
நிலையற்ற உலகில் எந்நிலைக்காகவும் வருத்தம் கொள்ள வேண்டிய அவசியமென்ன?

வீடு, நாடு, சொத்து, சுகம், புகழென்று எதை இழந்தாலும் அதற்காக கவலை கொள்ள ஏதுமில்லை...
வருத்தத்தை விட்டு வாழ்க்கையைத் துணிச்சலோடு எதிர்கொள்ள என்றென்றும் வறுத்தெடுக்கும் வருத்தம் தேவையில்லை...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (18-Oct-17, 3:01 pm)
பார்வை : 4265

மேலே