அன்பிற்கு பெண்ணே உன்னை படைத்தான்

பிள்ளைப்பருவம் முதல்
தாயின் அரவணைப்பில்
அதில் அன்பைத்தவிர
நான் கண்டது ஏதுமிலை
வாலிபப் பருவத்தில் -என்
தாய் எனக்கோர் நல்ல
பெண் தேர்ந்தெடுத்து
எனக்கு மணம் முடித்தாள்
நல்லவள் அவள்-அவள்
அன்பில் அலர்ந்த ரோசா
அவள் அரவணைப்பில்
அன்பைத்தவிர வேறொன்றும்
கண்டேன் அல்லன்
'அன்பின் வழியது உயிர்நிலை'
இது பொய்யா மொழி
என்று மணம் தெளிந்தேன்
' அன்பே கடவுள்' என்பர்
அந்த அன்பை , என் தாயில்
கண்டேன், பின் தாரத்தில்
ஓ, இப்போது புரிகிறது
மனிதனுக்கு அன்பு
யாது என்று தெரிவிக்கவே
பெண்ணை' அவன்' படைத்தான்
பார்க்கும் பெண்களில் '' எல்லாம்
அன்னையின் காட்சி...............
அன்பு பொழிந்திட ............
பெண்ணே, அன்பு வேறில்லை,
நீ வேறில்லை ; உள்ளம் சொல்லியது.















,

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Oct-17, 2:13 pm)
பார்வை : 114

மேலே