தீப ஒளி நாள் மகிழ்வு தினமும் எமக்குக் கிடைக்கட்டும்

நல்லவை வாழ்வில் நடக்கட்டும்
நன்மைகள் யாவும் பெருகட்டும்
ஒற்றுமை என்றும் நிலைக்கட்டும்
ஒவ்வாமை விலகி மறையட்டும்
இருப்பதில் நெஞ்சம் நிறையட்டும்
இல்லாமை எண்ணம் விலகட்டும்
தீமைகள் யாவும் ஓடட்டும்
திக்கெட்டும் அமைதி கூடட்டும்
இல்லாரை இருப்போர் காக்கட்டும்
ஏற்றத் தாழ்வுகள் போகட்டும்
வறுமை பிணிகள் நீங்கட்டும்
வசந்தம் வாழ்வில் பெருகட்டும்
எல்லோர் வாழ்வில் அமைதியும்
இறைவன் அருளும் நிலவட்டும்
இந்நாள் மகிழ்வுபோல் என்றும்
எல்லாமே எமக்குக் கிடைக்கட்டும்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (18-Oct-17, 1:13 pm)
பார்வை : 60

மேலே