ஓடி விளையாடு பாப்பா

உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் அதற்கு உங்களை தேர்ந்தார் உங்கள் வழியாக அவர்களை பூமிக்கு கொண்டுவந்தார்

சுமைகளை சுமத்த உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை அவர்களை ஏசவோ கடும் சொல்லால் பேசவோ அதிகாரம் தந்தது யார்

அவர்கள் எண்ணம் வேறு அவர்கள் செயல்கள் வேறு அவர்கள் உலகமே வேறு அவற்றை உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தூரத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் எங்கேயோ படித்த ஞாபகம் இது

ஆனாலும் இங்கே இளம் வயதிலேயே பாட புத்தகங்களை சுமப்பதற்கு பதிலாக குடும்ப பொருளாதார குறைபாட்டினால் அப்பார சிலுவையை தோளில் சமக்கிறார்கள் கண்களில் கண்ணீர் வரவில்லை இரத்தம் வருகிறது

ஓடி விளயாடு பாப்பா நீ பிறந்த அந்த நாள் தொட்டு இந்த உலகம் உனக்குச் சொந்தம் என்பதை மனதில் கொண்டு ஓடு ஓடி விளையாடு பாப்பா

ஓடும் போது உனக்கென கிடைத்த இடத்தில் நீ வாழ்க்கை விளையாட்டை விளையாட வேண்டும்
வாழ்க்கை விளையாட்டை விளையாடி முடித்தப் பின்னே வாழ்ந்த இடத்தை விட்டுவிட்டு ஓடு உன் புகலிடமானது எங்கோ அங்கே ஓடி விளையாடு பாப்பா அதுதான் நடந்துக்கொண்டிருக்கிறது

அந்த ஊரில் எல்லோரும் முன்னேறி விட்டார்கள் அதனால் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை

கிடைப்பவர்களை வைத்து வேலையை செய்துக்கொள்வது வழக்கமாகிவிட்டமையால்
அக்கத்து பக்கத்து ஊர் ஆட்களை அழைத்து தங்கள் வேலைகளை செய்துக்கொள்வது வழக்கம்

குந்தின இடத்திலேயே குந்திக்கொண்டிருக்கும் நந்தியில்லை வருவோரும் போவோரும் வணங்கிச்செல்ல

ஒடினால்தான் சோறு ஓடாவிட்டால் வேறு யாரு
கொண்டுவந்து ஊட்டிவிட
என்பதை ஆழ்மனதில் பதித்துக்கொள்ளும் வயதில்லை அந்த வயது

ஓடியாடி விளையாட வேண்டிய படிக்க வேண்டிய இளம் வயதில் வீட்டில் பொருளாதாரம் இன்மையினால் அதைத் தாங்கிக்கோள்ள இயலாத அச்சிருவன் அந்தி வேலைக்கு போவான்

சிறு பிள்ளைகளை வேலையில் அமர்த்தக்கூடாது என்பது ஐயாவுக்குத்தெரியும்
நாம் ஒன்றும் வலுக்கட்டாயமாக அவர்களை அதிகாரம் பண்ணவில்லையே பாவம் இல்லாமையும் ஒரு காரணமாக இருக்கலாம் ஒப்புக்கொண்டார்கள்

கட்டுமானகாரர்களிடம் அந்த சிறுவனை வேலை செய்யச்சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார் ஐயா என்பவர்

ஓரிடத்தில் அடுக்கப்பட்டிருந்த செங்கற்களை கட்டுமான இடத்தில் சேர்க்க வேண்டும்

அக்கல்லை தலைமேல் தூக்கி விடுவோரிடம் இன்னும் இரண்டு கல்லை வையிங்கள் என்று கேட்கிறான்

வேண்டாமடா போதும் நீ சின்னப்பையன் பாரம் தாங்கமுடியாமல் தல்லாடி விழுந்து கையை காலை ஒடித்துக்கொள்ளப்போ கிறாய் என்று விளக்குகிறார்

அண்ணே நான் தினம் புத்தகத்தை சுமக்கிறவன்
ஒடம்பு உறுதியாகத்தான் இருக்கு வைங்க அப்புறம் என்னோட கூலிய சின்னப் பையன்தானேன்னு கொறச்சிடப்போறாறு என்று பதில் கொடுத்தான்

தம்பி இரண்டு கல்லை நீ அதிகமாக சுமந்தால் ஐயா இரண்டு ரூபாய் கூட்டி கொடுக்கப்போறதில்லை இரண்டு கல்லு கொறவாய் தூக்கிப்போனாலும் இரண்டு ரூபாயை கொறவாவும் கொடுக்கப் போறதில்லை தம்பி வீணா ஏன் ஒடம்பை அலட்டிக்கனும்

வீட்டுக்காரர் ஒரு மரத்து நெழல்ல உக்காந்து பையனை கண்டுக்காத மாதிரி நோட்டமிட்டுக் கொண்டு இருந்திருக்கார்

அவரோட மனைவி குழந்தை பிரசவிக்க முடியாம கொழந்தையும் தாயுமா போய் சேந்துட்டு இருக்காங்க அந்த சோகம் அவர் முகத்தில் காண முடிந்தது பையனை அழைத்தார்

"அடே பையா இங்கே வா எங்கே இருந்து வர்றே"

"நான் பக்கத்து ஊருங்க ஐயா"

"என்ன படிக்கிறே"

"ஆறாவதுங்க ஐயா "

"உங்க அப்பா என்ன பன்றார்"

"அப்பா புத்து நோவுல போய் சேந்துட்டாருங்க ஐயா "

"அடக்கடவுளே .......உங்க அம்மா"

"ஒடம்புக்கு முடியாம ஒருமாசமா வீட்ல படுத்த படுக்கையா இருக்காங்க
என்னைவிட்டா எங்க அம்மாவுக்கு , எங்க அம்மாவை விட்டா எனக்கும் வேறு யாரையும் தெரியாதுங்க ஐயா "

"சாப்பாட்டிக்கு என்ன பண்றீங்க "

ரேஷன்ல ஆதார்கார்டு இல்லாதவங்க கார்டுக்கு ரேஷன் கொடுக்கிறத நிறுத்திட்டாங்க வீட்ல ஒன்னும் இல்ல
அதுக்காகத்தான் நான் படிச்சிக்கிட்டே சின்னச்சின்ன வேலைக்கு போயி கூலியவாங்கி அம்மாவுக்கு மருந்தும் சாப்பாடும் வாங்கிட்டு போவேங்க ஐயா நானே பரவாயில்லை வட நாட்லேயும் கார்டு இல்லாததால ரேஷன் கொடுக்காம நிறுத்திட்டதனால அந்த அம்மாவுக்கு வேறு வழியில்லாம பட்டினி கெடந்து பன்னிரண்டு வயசு புள்ள செத்துப்போச்சின்னு பேப்பர்ல படிச்சிட்டு அதப்பத்தி ரண்டுமூனுபேரு பேசிக்கிட்டத கேட்டேங்க

"ச்சா....என்னடா வாழ்க்கை இது...... சரி நாளயில இருந்து நீ வேலைக்கு வரவேணாம்"

"ஏங்க ஐயா பெரிய குண்டதூக்கி தலையில போடுறீங்க நான் சரியா வேலை செய்யலிங்களா நீங்க எப்படி செய்யனும்ன்னு சொல்லுங்க நான் அப்படியே செய்றேன் வேலைக்கு மட்டும் வரவேணாமுன்னு சொல்லாதீங்க ஐயா"

"நாளைக்கு மட்டும் வா" என்று கூறி கூலியை கொடுத்து
"ஆமாம் உன் பெயரை சொல்லவே இல்லையே"

"எம்பேரு அப்துல் கலாமுங்க"

"நீ இஸ்லாமியனா"

"இல்லங்க ஆதிதிராவிட கிருஸ்துவனுங்க"

"அப்புறம் எப்படி இஸ்லாமிய பேர வச்சாங்க"

"அவரு இந்துவா இஸ்லாமியரா எங்கிறது முக்கியம் இல்லீங்க
ஒரு தேசப்பற்று உடையவருன்னுமட்டும் தெரிஞ்சி அவரு பேர வச்சதா யார் கேட்டாலும் அம்மா சொல்லும் போது நான் கவணிச்சி இருக்கேங்க"

"சரி நாளைக்கு ஒரு சிஸ்டர் வருவாங்க அவுங்க கூடவே போய் இருந்து படி உங்க அம்மாவையும் அவுங்க கூடவே வச்சி ஒடம்ப கவனிச்சிக்குவாங்க என்ன"

"நான் போயிட்டா உங்க வேலை க்கு வேறு ஆள் கிடைக்கமாட்டாங்களே ஐயா"

"உனக்குத்தான் வேறு வேலை கொடுத்து இருக்கேனே போய் அந்த வேலையை ஒழுங்கா முடி"

"சரிங்க ஐயா உங்க பேரை காப்பாத்துவேங்கய்யா"

"என்பேரை காப்பாத்துறது இருக்கட்டும் உனக்கு வச்சி கூப்பிடுறாங்களே அப்துள் கலாமுன்னு அந்த பேருக்கு கலங்கம் வந்துவிடாம மட்டும் பாத்துக்கோ"

"சரிங்க ஐயா"

சிஸ்டர் நடத்துற ஆதரவு அற்ற வர் இல்லம் அதற்கு ஆண்டாண்டுக்கு உதவி செய்துக்கொண்டு வருகிறார் என்பது தெரியவந்தது

பையன் பிள்ளைகளோடு பரிச்சயம் செய்து வைத்தார் சிஸ்டர் சிரிய அளவில் இனிப்புகளையும் பரிமாறி இப்போதைக்கு நீங்க எல்லாரும் " ஓடி விளையாடு பாப்பா "ங்களா என அனுப்பிவைத்தார்

•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (21-Oct-17, 1:52 am)
பார்வை : 213

மேலே