வர்ணனை

வர்ணனை :-

மதிமுகமும் தோற்குமடி ! மங்கையுன் முகவழகில் !
விதிதானோ என்னுயிரே ! வியன்கூந்தல் பேசுதடி !
சதிசெய்தல் கூடாதடி ! சந்தனத்து தேகக்காரி !
ரதிதேவி நீதானே ! நந்தவனப் பூக்காரி !

சாந்துப் பொட்டழகி ! சிங்கார சிட்டே !
பாந்தமாக உன்னழகு பாதகத்தி கொல்லுதடி !
வட்ட வட்ட கண்ணழகி ! வனப்பெல்லாம் வளமையடி !
சுட்டுவிடும் விழிழகி! சுண்டிவிடும் சிகப்பழகி !

இளவரசி மறுமொழி :-

மன்னவனே ! என் மணவாளனே ! கேளாயோ !
விண்ணுலகம் வியக்கும் உன்னை மணமுடிக்க
மண்ணுலகம் வந்தவளே நான் தானே ! அறியாயோ !
பெண்ணிவளின் பார்வையினால் பேசும் சக்தி இழந்தாயோ !!

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (21-Oct-17, 5:34 pm)
பார்வை : 132

மேலே