என்னவள் கண்ணழகு

கன்னியவள் கண்ணழகை
எண்ணி எண்ணி பார்க்கையிலே
அதுவே ஒரு கவிதை தந்தது
இதோ அந்த கவிதை வரிகள்

அவள் விழிகளின் பார்வையில்
இளங்கன்றின் துள்ளல் கண்டேன்
பார்த்துக்கொண்டே இருக்கையில்
அது கெண்டையின் துள்ளலானது
மீனாக்ஷி அல்லவா அவள்!

என்னைப் பார்த்தபின்னே அவள்
கண்களில் ஓர் நாணம் ஏற அதில்
புள்ளிமானின் மருட்சி கண்டேன்

என்னையே நினைத்து அவள் சிந்தனையில்
இருந்தால் அவள் கண்கள் தரும் அழகு எப்படி
இருக்கும் என்று நினைத்தேன் -என் கண்முன்
அவள் கண்கள் அந்த மாடப் புறாவின் கண்கள் ஆனதே !

அவள் பார்வையில் ஒளி வீச கண்டேன்
அதில் அந்த நாகமணியின் ஒளி வீச்சைக் கண்டேன்

இவள், என்னவள் வீரத்தாயாய் நாளை
தீயோர்முன் வந்து நின்றால்
எப்படி இருக்கும் அவள் கண்கள் என்று
எண்ணிப் பார்த்தேன் அப்போது
அவள் கண்களில் கொற்கையின் சீற்றம்
பொறிபொறியாய் தெறிப்பதைக் கண்டேன்.

நவரசங்கள் அத்தனையும் இவள் கண்களில்
அடக்கம் என்று தெளிந்தேன் இப்போது
கண்ணே, உனக்கு உன்னவன் அதனால்
உன் கண்ணழகிற்கு இந்த கவிதை
காணிக்கையை வைக்கின்றேனடி
ஏற்றுக்கொள் , ஏற்றுக்கொள்வாயா ............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Oct-17, 5:00 pm)
பார்வை : 873

மேலே