வாழ தான் வாழ்க்கை

பகுத்தறிவைப் பற்றி அனைவரும் விவாதிப்பர்.
ஆனால், செயலிலோ முட்டாள்தனமே வெளிப்படும்.

அன்பைப் பற்றி அனைவரும் வாய்கிழிய பேசுவர்.
ஆனால், அன்போடு பழகுவோரை அவமதிப்பர்.

கருணையைப் பற்றி அனைவரும் கரைந்துக் கொண்டிருப்பர்.
ஆனால், உயிர்பலி இல்லாமல் உணவு உள்ளே செல்லாது.

ஒழுக்கம் பற்றி அனைவரும் ஓதிக்கொண்டிருப்பர்.
ஆனால், உள்ளத்தில் ஆயிரம் அடையாத ஓட்டைகளே நிறைந்திருக்கும்.

அறம் பற்றி அனைவரும் அறிவுறுத்திக் கொண்டிருப்பர்.
ஆனால், தன்னில் அறம் ஆற்றாமையே விளங்கும்.

சிறப்பு குறித்து அனைவரும் சீறிக் கொண்டிப்பர்.
ஆனால், சிறப்புக்குரியோராய் இரார்.

சிந்தனை பற்றி அனைவரும் சிந்திப்பர்.
ஆனால், அடுத்த நொடியில் அந்த சிந்தனை சிதைந்துவிடும்.

வாழ்நாள் முழுவதும் தர்க்கம் செய்து கொண்டிருப்பர்.
ஆனால், தன் வாழ்வை வாழ்ந்ததில்லை.

நேர்மை பற்றி அனைவரும் ஆராய்ந்துக் கொண்டிருப்பர்.
ஆனால், நேர்மையைக் கடமையாய் ஆற்றுவதில்லை.

என்ன கவிஞரே! உபதேசமெல்லாம் ஊருக்குத் தானா?
உமக்கில்லையா?
என்று ஒவ்வொரு கவிதை எழுதும் போதும் என் மனசாட்சி என்னைத் தட்டிக் கேட்கிறது.
ஆதலால், நான் எழுதுவதை வாழ்ந்து அனுபவிக்கிறேன் என் வாழ்க்கையாய்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (23-Oct-17, 11:14 pm)
பார்வை : 1841

மேலே