தெய்வம் எரிந்தது

கண்களில் நீரில்லை
வீட்டிலிருந்து நீ புறப்பட்டாய்
வீதியில் விளையாடத்தானே
விளையாடியது விதியன்றோ
வீதியிலே உனை எரித்ததாரோ.?
திண்பண்டம் கையில் வைத்து
தீ உன்னை திண்ண போது
எரிந்தது மனிதமன்றோ
தெய்வமும் இறந்ததன்றோ..
கள்ள பணம் கொள்ளையரே
பிள்ளை மனம் கொன்றவரே
நீ பிணமானால் கைநிறைய
பணப்பையா அணைத்து செல்வாய்..?
பிணிபிடித்து பாடையிலே
பித்தனாய் வீழ்ந்திடுவாய்
வைத்தியம் நீ பார்த்தாலும்
வலி வலித்தே நீ சாவாய்..!
குமரிபையனின் குமுறல்
23.10.2017