இக்கால ராதையின் மடல்

நான் ஓட வேண்டும் உள்ளே புதைந்திருக்கும் எல்லா வலியையும் மறைக்க.
நான் கத்த வேண்டும்..
நான் அழ வேண்டும்..

நான் ஏன் அவனிடம் விடைபெற முடியாது?
நான் செல்ல விரும்புகிறேன்;

நான் போக விடமாட்டேன்.
அவனை எப்போதுமே எனக்குத் தெரிந்ததை விட அதிகமாய் இப்போது நேசிக்கிறேன்.

நான் ஆரம்பிக்க வேண்டும், நான் சுதந்திரமாக வாழ..
ஆனால், இந்த வலி என்னை ஒருபோதும் விட்டு விடாது.

அவன் என்னை மோசமாக காயப்படுத்தினான்;
வலியை ஆழமாக வைத்துக் கொள்ள முடியாது.

அவன் சொன்னதைப் பொய்யெனக் கூறினேன்..

என் தலையில் எழுதியிருக்கிறதா?
அவனை நான் எப்படி மறக்க முடியும்?
என் மனதில் இருந்து நினைவுகளை அழிக்கவா?

அவன் என்னை நேசிக்கவில்லை..
அவன் ஒருபோதும் விரும்பமாட்டான்..

அவன் எப்படி உணருகிறான்? என்பதை நான் கவனிப்பதில்லை..

விலகி இருக்க விரும்புகிறேன் வாழ்நாள் முழுவதும்..
அந்த நிகழ்வுகள் மறையுமா?
என் சுதந்திரம் கிடைக்குமா?

அவன் இன்னும் என்னை வெறுக்கிறானா?
என்னை மறந்து சந்தோஷமாய் வாழ்கிறானா?

அவன் நினைவுகளில் சிக்கி வாடுகிறேன்...
அவனிடம் இதை யார் சொல்வார்?
தென்றல் காற்றே! நீ போய் சொல்லு...
என் வாழ்நாள் முழுவதும் அவனுக்காக தவமிருப்பேனென்று...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (24-Oct-17, 9:46 pm)
பார்வை : 1520

மேலே