2020 ல் பதினாறு

அரசாங்கன் செத்தாச்சு..!
பெட்டி வாங்கத்தான் GST
புதைக்கத்தான் கதிராமங்கலம்
வாய்க்கரிசி போடத்தான்
ரேசன் கடை மூடல்
கல்லறை விளக்கெரிக்கத்தான் மீத்தேன்
மண்ணிடாம புதைக்கத்தான்
புத்தம் புது வரவு நோட்டுக்கள்
கல்லறைக்குத்தான்
மணல் விற்பனை
ஊர்வலத்திற்கு சுங்கவரி
சோகம் தெரிய மாட்டிறைச்சி தடை
சுடுகாட்டு கல்லறைக்குத்தான் அணு உலை
அஞ்சலிக்கு நீட்
சுடவா புதைக்கவா போட்டி போரில்
சீனா பாகிஸ்தான்
தமிழனை விடுவித்து இந்தியாவிற்கு
வீரவணக்கம் செலுத்தியது இலங்கை
2020 ல் பதினாறு தினம்
அரசாங்கன் அருளால்..!

எழுதியவர் : செ.பா. சிவராசன் (30-Oct-17, 10:16 pm)
பார்வை : 67

சிறந்த கவிதைகள்

மேலே