வாடிப்புள்ள வாழப்போவோம்
*****
ஓடுகிற வண்டியில ஒத்தையடி பாதையில
ஒய்யாரமா போவோம் புள்ள
ஒளிஞ்சி நீ நிக்காம வாடி புள்ள...
லொட லொடண்ட சத்தத்தோட
லேசாக தடவிவிட்டு
தள்ளி நின்னு தாவனித்துண்டால
வெட்கத்த மூடுறியே...
ஊரெல்லாம் இருட்டிரிச்சி
ஏங்கண்ணுமட்டும் இருட்டலயே
உன்ன கண்டபின்ன...
ஊர் போய் சேரும்முன்னே
மூணு முடிச்சு போடணும் புள்ள ஒங்களுதுக்குள்ள...

