காதலின் நேரம்

கடிகாரம் போலே
நம் காதல் தானே
இருக்கும் வரை
ஒன்றாகவே வாழ்ந்திடுவோமே...
முடியும் தருணம் கடிகாரத்தோடு (🔋)
அதன் நேரமும் அந்நொடியே ஒன்றாக உறைந்திடுமே
(முடியும் தருவாயிலும் என் கடிகாரமான உன்னோடு
உன் நேரமான நான்
ஒன்றாக உறைந்திருப்பேனே)

*ஊடல் கொண்டு
தள்ளிச் சென்றாலும்
நாம் எப்பொழுதும் ஒருவரை ஒருவர் சுற்றிச்சுற்றியே

* நாம் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவியே

*இருவரும் ஒன்றாக இணைந்தே இயங்குவோமே இதயத்திலும்...
* நீ உறையும் அதே நொடியில் அங்கேயே உன்னோடு உறைந்திடுவேனே
மரணத்திலும்...

நேரத்திற்குள்ளே நாம் வாழ்ந்தாலும்
நேரங்கள் அற்று காதலிப்போம்..

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (31-Oct-17, 5:25 pm)
Tanglish : kathalin neram
பார்வை : 368

மேலே