முதல் பார்வையில் வந்த காதல்

அடா அடடா!!!
இதுவரை தேவதையின்
நிழல் பார்த்தவன்
அவளை கண்ட பின்னே
தேவதையின் மொத்த
உருவம் பார்க்கின்றேன்

உன் முதல் பார்வையில்
என் காதல் விபத்து
முதலுதவியாய்
உன் புண்ணகை போதும்

இதயத்தில் நான்கு அறைகள்
ஒன்றிலாது இடம் கொடு
இதை விட சிறந்த மருத்துவமனை
எது

நீ என்ற சொல்லுக்கும்
அழகு என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஒரே பொருள்

காற்றோடு வந்து
காதலாய் இறங்கியவளே

காற்றும் இன்று தான்
என் கண்ணுக்கு தெரிந்து

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (1-Nov-17, 4:24 pm)
பார்வை : 185

மேலே