வெள்ளி கொலுசு

எல்லாக் கால்களிலும்
கொலுசுகள் கிணுகிணுக்கின்றன.
ஆனால் உன் கால் கொலுசு மட்டுமே
என்னுடன் பேசுகின்றன

அடவுகள் பல சேரும்போது
அதுவே ஜதி என்று வரும்.
அடவுகளின் எண்ணிக்கை
நூற்றி இருபது என்பது நாட்டியசாத்திரம்.

அன்பே,
நீ நடக்கும் போது உன்
பாத அசைவுகளில்தான்
எத்தனை அடவுகள்
எத்தனை அபிநயங்கள்.
நீ நடக்கின்றபோதே
நடனமாடத் தெரிந்த
அழகு மயில்தானடி

அது எப்படி நீ ஒரேவிதமாகவே
நடை பயில்கின்றாய் - ஆனால்
உன் கொலுசுகளோ ஏழு ஸ்சுரங்களையும்
எப்படி இசைக்கின்றன.

எழுதியவர் : (1-Nov-17, 4:22 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : velli kolusu
பார்வை : 4910

மேலே