விழி சொல்லும் வழி

பள்ளம் நிலத்தில் தான் இருக்கும்
நீ உன் விழியில் வைத்திருந்தாய்
கூர்மை கத்திக்குத் தான் உண்டு
உன் பார்வைமுன் அதுவும் பூச்செண்டு

விழியிலேயே விருந்தும் தினம் உண்டு
காதல் நோய்க்கு மருந்தும் அதிலுண்டு
பார்க்காத நேரமெல்லாம் என்பார்வை உன்மேலே
நீயென்னைப் பார்த்துவிட்டால் நான்மிதப்பேன் தன்னாலே

விழி கொடுக்கும் கவிதைகள் ஆயிரம்
அதை நூலாக்கி எழுதுவேன் பாயிரம்
சாரல்மழை உன்விழிமுன் சற்றும் எடுபடாது
வானவில்லும் விழிமுன்னே முற்றும் தெரிந்திடாது 

விழியின் வீச்சை தேனாய் ஆக்கி
குடித்தேன் நிதமும் கவிதை ஊக்கி
இருளில் விழுந்து கிடந்தேன் என்றோ
வெளிச்சம் உன்னால் பறந்தேன் இன்றோ

விழியின் வழியில் பொன்னாய் கண்டேன்
அழியும் மலரும் மணக்கக் கண்டேன்
இதயம் உள்ளில் உன்னை வைத்தேன்
காதல் கொண்டு இறுக்கத் தைத்தேன்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Nov-17, 4:08 pm)
Tanglish : vayili sollum vazhi
பார்வை : 327

மேலே