காதல் சொல்ல வந்தேன்
![](https://eluthu.com/images/loading.gif)
உன்செவி விழுந்ததா எந்தன் வார்த்தைகள்
உன்னை அடைந்ததா எந்தன் வாக்கியம்
உன்னை அடைந்தால் அதுவென் பாக்கியம்
உனக்காய் வாழ்ந்தால் ஆவேன் யோக்கியன்
என்றோ ஒருநாள் என்வழி கடந்தாய்
அன்றே எந்தன் இதயம் கடைந்தாய்
கன்றாய் ஆனேன் உன்னைத் தேடி
நன்றாய் நானும் நாளும் அலைந்தேன்
இதயக் காயம் ஆறத் தேவை
ஆமாம் என்ற காதல் சேவை
உனக்கு முன்னே சொல்வென் எப்போ
எதுவும் நானும் அறியேன் அழகே
எனக்கு உன்னை பிடித்தது போல்
உனக்கு என்னை பிடிக்கும் தானே
என்றே கனவில் உன்முன் நின்று
காதல் வசனம் பேசினேன் இன்று
பித்தன் போல ஆனான் உன்னால்
புத்தன் அல்ல ஆசை மறக்க
சித்தன் கூட ஆக மாட்டேன்
பக்தன் ஆவேன் தேவி உனக்கு
இன்றே வருவேன் காதல் சொல்ல
மறுத்து ஏதும் சொல்ல வேண்டாம்
மறுக்கும் எண்ணம் எதுவும் இருந்தால்
வெறுக்கும் பார்வை மட்டும் கொடுடி..