கிறுக்கியின் கிறுக்கல்கள் - 12

உதடு சுவைப்பது நீ..
உன் கூர் பற்களுக்கிடையில்
சிக்கித் தவிப்பது மட்டும் நான்..!
***
உன் வெட்கத்தை
மென் பொன் விரல்கள்
கொண்டு மறைக்கிறாய்..
நகப்பூச்சும் இப்பொழுது
முகப்பூச்சாய்..!
***
கண்ணீரை பன்னீராக்கிச்செல்கிறது
கண்ணீர்த்துளியோடு கலந்த
மழைத்துளியொன்று..!
***
என் தேகத்தை தீண்டி
சோகத்தை கலைத்து
அழைத்துச்செல்கிறது
இம்மேகமழை..!
***
மண்வாசம் மழை தீண்டலைச்
சொல்லிக்கொண்டிருக்க
உன் வாசம் எனைத்தீண்டிடச்
சொல்லிக்கொண்டிருக்கிறது..!
***
நீ கோலமிடுகின்றாய்
இல்லையில்லை என்னை
கொள்ளையிடுகின்றாய்..!
***
உன்மீது மையல் கொண்டு
உன்னில் மையம் கொண்டுள்ளது
என் காதல் புயல்..!
***

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (1-Nov-17, 4:24 pm)
பார்வை : 103

மேலே