துரோக இரவுகள்

வெகுநாளாய் இரவில் உறக்கமில்லை-இங்கு
வேறொருவர் எனக்காய் உறங்குவதில்லை..
ரணமாகி கொண்டிருக்கின்றன என் இரவுகள்,
பிணமாகி கொண்டிருக்கின்றன சில ஜீவன்கள்.
என் போர்வைக்குள் ஓர் போர் நடக்கின்றது
கண்ணிற்கும் கைக்கும் அகப்படாத எதிரிகள்
என் காதருகே வந்துவந்து சர்வதிகாரம் செய்கின்றனர்
"அவர்களை கொல்லத் துடிக்கின்றது என்னிருகரம்
கொல்லும் முயற்சியில்,
என்னை நானே அடித்துக் கொண்டேன் பலதரம்"
முயற்சியை கைவிட்டுட்டு, மூடிட்டு படுத்தேன்..
தற்போதும் என் ரத்தம் உறிஞ்சப்படுவது தெரிந்தும்
தடுக்க முடியாமல் தாங்கி கொண்டிருக்கிறேன்.
துரோகத்தின் வல்லமையால் முழுவதும்
சாகடிக்கப்பட்டு விட்டதாகவே உணர்கிறேன்.
"என் ஜீவன் மீண்டுவந்து இவ்வுலகை காணுமா?,
எரிகின்ற உன்தேகம் என்னுயிர் காக்குமா?”
சிரமங்களை குறைத்து, சீக்கிரம் இப்போரை நிறுத்து!
ஐயோ,
இந்த கொசுக்கடி தாங்க முடியல..
அது கடிச்சா கூட தாங்கிக்குவேன்,,
ரீங்ங்ங் ரீங்ங்ங்னு போடுற சத்தம் இருக்கே!!
சாந்தமான என் இரவை சலனமாக்குது அச்சத்தம்..
கனவுகள் எனக்காய் காத்திருக்கின்றது..
இரக்கமற்ற கொசுக்களை விரட்டி, இன்னுறக்கம் தா கொசுவத்தியே!!
மீண்டும் ஒருமுறை படிக்கவும்..
- அருணன் கண்ணன்

எழுதியவர் : அருணன் கண்ணன் (4-Nov-17, 11:43 am)
Tanglish : ragasiya iravugal
பார்வை : 407

மேலே