அவள்நோய் பொழுதில்

மாலைக்கருக்கலில் - மனம்
சேலை கிறுக்குதே
மாட்டிக் கொண்டவன் - என்னை
மாற்றி வைக்கிறாள்

ஊமை விழிகள் - உன்னை
தேடி அலைந்திட - காதல்
உரசிக்கொண்டே
உயிர் தொட்டு உறையுமோ

கோடி வரங்கள் - அதன்
தேவை எனக்கில்லை
கொடியே உன் விரல்
பிடித்தே நடக்கையில்

தனிமை நாள்பொழுதில் - காதல்
பத்தியம் கடைபிடித்தாலென்ன,
அவள் நோய்க்கு
அந்தி மருந்து தருமோ..!

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (4-Nov-17, 8:46 pm)
பார்வை : 88

சிறந்த கவிதைகள்

மேலே