மணல் வீடு
ஆத்தங்கரை மணலெடுத்து
அரண்மனைய செய்திடுவோம்
மாளிகையை கச்சிதமா
ஆங்காங்கே கட்டிவைப்போம்
வீர்ர்களும் குதிரைகளும்
யானைகளும் செய்திடுவோம்
கோபுரத்தை சுத்திபாத்து
சந்தோசம் கொண்டிடுவோம்
போரெடுத்து போகச்சொல்லி
வீரர்களை ஏவிடுவோம்
வாளெதுவும் கொடுக்கமாட்டோம்
அன்புமட்டும் போதுமென்போம்
அம்மாவந்து கூப்பிட்டாக்க
அப்படியே ஓடிடுவோம்
நாளைவரும் வேளைவரை
நினைவுக்குள் வைத்திடுவோம்