ஒரு உலகு போதாது உனக்கு

வாழ்த்துக்களில் வானமும்
வசப்படட்டும்...
---------------------------------------------
குழந்தை: வெ.மிருதுளா

04 - நவம்பர்- 2017
சனிக்கிழமை

மல்லிகைப் பூவினும் மெல்லிய பூவினமே...
நாம் இனிதென வாழும்
யாமினி செந்தில் தம்பதியின்
அன்பு ராஜாங்க நந்தவனத்தின்
சந்தனக் காற்றே...
கனியினங்கள் தோற்றிடும்
மழலைக் குரலாளே...
விழிகளாலும் சிரிப்பவளே...
வெண்பஞ்சொத்த பிஞ்சுப்பாதம்
கொண்டு நடை பயில்பவளே...
இனிய மிருதுளாவே...

கல்வியில் கருத்தூன்றி...
செல்வம் வரும் நல்வழியறிந்து...
உடல்நலம் எப்போதும் பேணி...

தானும் தன்னைச்சார்ந்தோரும்
நலம்பெற நல்லது செய்து...
பிறர் நலத்துக்கும் பங்காற்றி...
தாய்மொழித்தமிழை தன்வசப்படுத்தி...
இலக்கிய இதிகாசம் அறிந்து...

மனமொத்த வேலைசெய்யத்
தன்னைத் தயார்செய்து...
திட்டமிடல் பாதுகாப்பு தரமேம்பாட்டில்
வரும்முன்னர் காத்து...
தானும் தன்சுற்றமும் சோர்வு
தவிர்க்க ஆவன செய்து...

கலைகள் கற்றறிந்து...
காலத்தே பணிசெய்து...
உனக்கென உதவும் களம் ஒன்று அமைத்து...
செய்வனவெல்லாம் திருந்தச் செய்து...
இவையெல்லாம் தவறாதொழுகி...
தவறாதொழுக முடியாவிடத்தும்
மனம் குறைபட்டுக் கொள்ளாது...

வரலாற்றில் இடம்பிடிக்க என்றில்லாமல்
உன்னை உனக்குப்பிடிக்க வாழ்ந்திரு...
உன் ஒரு வயதில் உன்னை வாழ்த்துகிறேன்...
ஒரு புதிய நூறாண்டு உனக்கானது...
அது இதுவரை வாழ்ந்த யாரும் காணாதது...
புதுமையிலும் புதுமையானது...

இனிய மிருதுளா... உனது
சங்கரி... முத்துலட்சுமி பாட்டிகளும்...
திருமலை... பெருமாள் தாத்தாக்களும்
உனக்கு அமைந்திருக்க வெல்வதற்கு
இந்த ஒரு உலகு போதாது உனக்கு...

பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!
வளங்கள் எல்லாம் பெற்று...
வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

அன்புடன்...
ஆர். சுந்தரராஜன் &
நெல்லை அரசு பொறியியற் கல்லூரி
மாணவ நண்பர்கள் (1982-86).
👍🙋🏻‍♂😀🙏🍰🚶🏻🌷🌺🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (5-Nov-17, 6:11 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 332

மேலே