கனமான காதல்
நிறைவாக பள்ளி முடிந்த காலத்தில் ..
மனம் முதல் பிரிவு கண்ட நேரத்தில்..
சற்றும் எதிர்பாராமல் கிடைத்த உறவு அவன்..
நண்பனாய் என் வாழ்வில் வந்த மாயவன்..
பின்பு பேச தொடங்கிய வார்த்தைகள்..
பகிர்ந்து கொண்ட பல சோகங்கள்..
முடிவு பெறாத பேச்சுகள்..
மனதில் ஏதோ ஒரு மாற்றத்தை வாட்டுதே..
குழந்தைத் தனமாய் இருந்த பேச்சுகளுக்கு..
ஆழமான அர்த்தங்களை புரிந்து கொண்டது அவன் மனம்..
கல்லூரி கோடை விடுமுறைக்கு அவன் வீடு திரும்பிய போது..
நான் வெளியே சென்று வீட்டை நெருங்கிய போது..
ஓரு மின்சார பார்வை என்னை தாக்கியது..
தூக்கத்தைத் தொலைத்தேன்.. தனிமையை ரசித்தேன்..
கனவா நினைவா என்று தெரியவில்லை..
ஆனால் காண வரும்புவது அந்த கண்களை மட்டுமே..
மௌனம் பேசிய மொழியை அன்று தான் உணர்ந்தேன்..
காதலில் விழுந்தேனா.. இல்லை அந்த கண்களில் வீழ்ந்தேனா என்று தெரியவில்லை..
நாங்கள் நண்பர்கள் தானே என்று தயங்கியது என் மனம்..
விடை கிடைத்தது அவனிடமிருந்து..
தான் மட்டுமல்ல தன் கனவுகளும் என்னை நேசிக்கிறது என்று..
முதல் முதலாய் பேச தயங்கிய நொடிகள் அது..
தயங்கிய பின்பும் தொடர்ந்த்து என் வார்த்தை..
தோழனாக மட்டும் இரு என்று..
மனதில் எழுந்த குழப்பம் மறுக்கச் சொல்லியது அவன் காதலை..
பின்பு மனம் மௌனம் பேசிய வார்த்தையை நினைத்தது..
இவன் தானா என்று பல கேள்வி கேட்டது..
என் வார்த்தைகளை கொள்ளை கொண்ட அவன்..
என் மனதையும் கொள்ளைக் கொண்டுவிட்டான்..
சிறு நேர பேச்சுக்கு பின்பு..
உறுதி செய்தேன் அவன் மேல் கொண்ட காதலை..
இருவரின் மனம் ஒன்று சேர்ந்த அந்த ஒரு நொடி..
மயில் தோகை போல் ஒளிர்தேன்..
பல கோடி பட்டாம்பூச்சி..
என்னுள் பறப்பதையும் அன்று தான் உணர்ந்தேன்..
காதலில் இருக்கும் சுவாரசியம் காதலிப்பவர்களுக்கு தானே தெரியும்..
காதல் கரடுமுரடான பாதை எனத் தெரிந்தும்..
பயணிக்க விரும்பியது என் மனம் அவன் செல்லும் பாதையில்..
அலைபேசி அழுத காலம் அது..
அவனுடன் கழித்த காலங்கள் ஆத்மாத்தமான காதல் கதையை தீட்டியது..
பேசாமல் இருக்கும் ஒரு நொடியும் பல யுகமாய் கழிந்தது..
தொலைதூரம் இருந்த பொழுதும்..
அருகில் உணர்ந்த நேரம் அவை..
என்னை காண விரும்பிய கண்கள்.. அவன் இதயம் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்தது..
ஊருக்கு வந்த அவனின் ஒரே ஆசை..
அவன் நிழலில் நான் நடந்து செல்ல வேண்டுமென்று..
அச்சம் இருந்தும் வெளிவர சம்மதித்தேன்..
அவன் என்னுடன் இருக்கிறான் என்ற தைரியத்தில்..
பல கோடி வார்த்தை அலைபேசியில் பேசினாலும்..
அவன் அருகினில் ஒரு வார்த்தை பேச முடியவில்லை..
நான் காத்திருந்த கண்கள் என்னை காதல் செய்வதை பார்த்த பொழுது..
காதலை வீழ்த்தியது என் வெட்கம்..
அவன் அருகில் அமர்ந்து, தோல் சாய்ந்து, கைகோர்த்த நிகழ்வு..
நான் மாய்ந்த பின்பும் மனதில் நிறைந்திருக்கும்..
பல நேரம் அவன் துணை இருந்தும்.. பிரிய மறுத்தது என் மனம் அவன் நிழலை நகர்ந்து..
இன்னொரு வாய்ப்பு மீண்டும் கிடைக்காதா என்று ஏங்க தொடர்ந்தது என் மனது..
தினமும் தோன்றும் நிகழ்வு எல்லாவையும்..
அவனுடன் இருந்த பிறகு ரசித்துப் பார்க்கத் தொடங்கினேன்..
அவன் பெயருடன் என் பெயரை எழுதி பார்த்து..
காலம் முழுதும் இப்படியே இருக்க வேண்டுமென்று அந்த கடவுளை வேண்டினேன்..
இருவரும் ஒன்று சேர்ந்து சென்ற கோவில்களின் கல்வெட்டுகள்..
இருவர் மேல் கொண்ட காதலை கூறும்..
அவ்வப்போது வரும் சிறு சிறு சண்டை...
இருவரின் இனிய பட்டியலில் சேரும்..
சிறிதாய் தொடங்கிய சண்டை.. பின்பு பெரிதாய் உருவெடுத்தது..
பிறரின் மீது தவறு இருந்தும் மனம் மன்னிப்பு கேட்க தயங்கவில்லை..
அவன் சமாதானம் செய்யும் அழகை ரசித்துப் பார்க்க இரு கண்கள் போதவில்லை..
பிரிவு என்று பல நேரம் கோபத்தில் கூறுகையில் அவன் என்னை விட்டுப் கொடுக்க துணிந்ததில்லை..
பின்னர் அவனே பிரிவு தான் முடிவு என்றபோது.. நான் மறுத்தும் அவன் மனம் மாறவில்லை..
என் உயிருடன் கலந்த அவன்.. என் உயிரை
அவனுடன் எடுத்துச் சென்றுவிட்டான்..
உடல் வேறு.. உயிர் வேறு என்று உணர வைத்தான்..
எப்படி அவனால் இருக்க முடிந்தது.. என்னை பிரிந்துவிட்டு..!?
என் இதயம் கசியும் கண்ணீரை.. மறந்துவிட்டு..!?
பல பேச்சுகள் பலரிடமிருந்த கேட்ட பின்பும்.. அவனை வெறுக்க முடியவில்லை..
வேறு எவரையும் ஏற்றுக் கொள்ள.. என் மனம் மாறவில்லை..
என் மேல் கோவம்கொள்ளாத அவன்..
என்னை பிரிய நினைத்திருந்தால்..
அதில் பல காரணம் இருந்திருக்காது..
" எனக்காக " என்ற ஒரே காரணம் தான் நிறைந்திருக்கும்..
அவன் காதலை மட்டும் உணரவில்லை..
அவன் முழு மனதையும் உணர்ந்த நான்..
எப்படி மறப்பேன் அவன் மேல் கொண்ட காதலை..!?
காலம் முழுதும் காத்திருப்பேன்..
அவனுக்காக..
வரவில்லையெனில்.. மாய்ந்து கல்லறையில் இருப்பேன்..
அவன் காதலியாக..