தோழமைக் காதல்
பத்து வயது முதல்
பள்ளிக்கூட நண்பர் நாம்
பருவ வயதில் பாலகர் போல்
பழகி வந்தோம்
சின்ன வயது கதை பேசி
சிரித்து மகிழ்ந்து இருக்கையிலே
மௌனத்தில் நீயும் மனதால் தினம்
பேசிடுவாய்
உனகாக என் உணவில் ஒரு கவளமேனும் வைத்துத் தந்தால்
வாங்கி நீயும் வேளை உன் மனதை நான் அறிந்ததில்லை - தோழா
உள்மனதை விளங்க
வில்லை
உன் அன்பு வானில் சிறகடித்து பறந்தேன்
என் வலக்கரம் நீ என்றாய்
அன்று புரியவில்லை
அதன் அர்த்தம்
காகிதத்தில் கடிதம் எழுதி
எனைக்கண்டதும் வீசிவிடுவாய்
வேடிக்கையாய் கேட்பேன் - நானும்
யாருடா அந்த பெண்ணெண்று?
காலம் பல சென்றாலும்
கலக்கம் இல்லா நம் நட்பு
காதலெனும் கல் அடியாள்
கலங்கித்தான் போனதடா
அன்புத் தோழா நீ
என்னை காதலிப்பதாய் கூறினாயே
உன் வார்த்தையை துச்சமென மதித்து
வார்த்தைக் கோடுகளால் உன் காதல்
எண்ணத்துக்கே கடிவாளம் இட்டேனே
அன்று புரியவில்லை
உன் காதல்வலி
அன்பு சினேகிதனே
உன் காதலை விட நம் நட்பு
உயர்ந்தது என்று எண்ணிய
எண்ணம் இன்று பொய்யானதே
எனக்காக நீ உன் வாழ் நாளே
வீணாக்கும் வேதனை கண்டு
வெக்கித்து தலை கவிழ்தேன் தோழா
உன் காதல் முடமாகி போனாலும்
உன் வாழ்கை வீணாக போவதில்லை
பாசத்தின் பாதையில் பாழாகிப் போன என் வாழ்க்கை காவியம்
உன் கதை புத்தகமாய் உலகில் ஒரு நாள் வலம் வரலாம் தோழமை கொண்ட காதலுடன் .,....