அடியே மேகமழையே

அடியேய் ....மேகமழையே
உன்னைத்தான் சென்னைக்காதலன்
கரம் தொடவே மறுக்கிறானே
பின்பு ஏனடி அவனையே சுற்றுகிறாய்
கொஞ்சமும் வெட்கமின்றி !!!
இங்கு ஒருதலைக்காதலுடன்
இராமநாதபுரம் மாவட்டக்காதலன் காத்திருப்பது
கண்ணுக்கு தெரிவதே இல்லையோ !!!
இல்லை தெரிந்திருந்தும் மௌனம் கொண்டாயா !!!
உனது காதல் மழையை
கொஞ்சம் இங்கு கொட்டிப்பார் !!!
காலமெல்லாம் உந்தன் காலடி சுற்றும்
கணவனாக இருப்பான் என்பதை புரிந்துகொள்வாய் !!!