முக்தி முகர்ந்தவன்

முக்தி முகர்ந்தவன்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மனித மாயம் மந்திர தேடல் 
மனோபாவத்தை
மயக்கிய வித்தையில் மாய உலகு...

மக்கிய பணக் காகிதம்
மாய உலகில் மந்திரமாக்கி
உறவுகள்  மண்டியிட்டது ....

ஆளும் ஆட்சி மக்கள் மனதில்
அகம் கண்டது ஆயிர கூட்டத்தில்
சாக்கடை ஆக்கியவன்
சாதி வெறியில்...
சமத்துவம் அகற்றி
காதலை கசக்கிய
பெற்றோர் வெட்டியான்...

ஆசை துணைவி
ஆயுள் முழுக்க
அத்துனை இன்பம் ஆசிபெற
கண்டவன் காலில்
காகித காசுக்கு விழும்
கணவனின் கண்ணியம்...

மணம் புரிந்து
மனமறியா மனைவி துப்பில்
நாண்டு சாகும்
கணவன் காதல் காற்றில்...

மூத்திரம் அள்ளி  மூத்தவனாக்கி
அடைக்கலம் கொடுத்தவன் 
முதியோர் இல்லத்தில் 
மூச்சு திணறி முகம் மூடலில்...

பிள்ளை பருவத்தில் 
கல்வி  கண்டு கலாம் கனவில் 
காலம் காணும் கண்ணியத்தை
கால் பிடிக்கும் பாலியல் தொந்தரவு தலைமை ஆசான் கடவுளாக...

படிப்பில் தற்கொலை 
பாலியல் கொலை...
முதியோர் தற்கொலை 
மருத்துவ கொலை ...
காதல் தற்கொலை
கெளரவ கொலை...

ஆதி காலத்தில் மீண்ட உலகில்
மீத்தேன் பலியில் உலக அழிவு..
முன்னேற்ற உலகில் 
முக்தி முகர்ந்தவன் யார்...?

                                               -லாவண்யா

~~~~~~~||||~~~~~~~||||~~~~~~~

எழுதியவர் : லாவண்யா (5-Nov-17, 10:06 pm)
சேர்த்தது : லாவண்யா
Tanglish : mukthi mukarnthavan
பார்வை : 68

மேலே