நிலவுடன் நான் நடந்த பொழுதுகள்
நிலவுடன் நான் நடந்த பொழுதுகளும்
உன்னோடுதான்
நினைவுகளுடன் நான் நடக்கும் பொழுதுகளும்
உன்னோடுதான்
தனிமையில் நான் காத்திருக்கும் பொழுதுகளும்
உனக்காத்தான்
அந்திப் பொழுதுகளும் அழகிய நிலவும்
நமக்காகத்தான்
ஆம்......பாவம். காத்திருக்கின்றன !
----கவின் சாரலன்

