ஆவலோடு நான் காவலோடு நீ

[] ஆவலோடு நான் .. காவலோடு நீ ..
------------------------------------------------------------------


வெட்கத்தில்
வேகத்தை கூட்டி விட்டு
சொர்கத்தை
கண்ணில் மட்டும் காட்டி விட்டு
அமைதியாய்
அன்பே அங்கே நீ
அடங்க முடியாதவனாய்
அவதியில் ஐய்யோ இங்கே நான்

யார் என்றே தெரியாமல்
உன்னை பார்க்க வந்தேன்
யார் வேண்டும் இனி
நீ போதும் என்றே
திரும்பி வந்தேன்

அதிசயித்து போனேன்
அழகை கண்ட நொடியில்
அடிமையாகி போனேன்
அந்த கூந்தல் முடியில்

ஜடையோடு சேர்த்து இனி
என்னையும் பின்னி விடு
ஐடமாக கிடந்தவனுக்கு
வரமாக அந்த வாய்ப்பை கொடு

ஆஹா -
அது கூந்தலா
அழகின் கூடலா
இவள் தான் என்
இத்தனை ஆண்டின் தேடலா

நம் பெயர்களின் தொடக்கமே
நாம் ஒன்றினைய வேண்டுமென்று
தம் விருப்பத்தை சொல்கிறதோ
விலகி வாழ்ந்தது போதுமென்று
நம் நெருக்கத்தை சொல்கிறதோ

கவிதைகள் என்றாலே
திரும்பி கொள்கிறவன்
இன்று -
தேடி தேடி படிக்கிறேன் ..
மனம் முடித்த பின்
தினம் உனை வாசிக்க வேண்டுமல்லவா !

பூ வைத்து முடிந்தது
பொட்டும் வைத்து முடிந்தது
கட்டும் நாள் வரும் வரையில்
திட்டும் கூட இவன் செவியில்
தித்திப்பாய் வந்து விழும்

ஆனாலும் அவ்வப்போது
உன் பிரிவினை என்னி -
அடிமனம் நொந்து அழும் ..
அன்று பார்த்த உன் முகமே
அழுகைக்கு ஆறுதலும் தரும் !

இளையராஜாவின்
இந்த பாடலை தான்
இனி எப்போதும்
என் மனம் முனுமுனுக்கும்

"என்னவென்று சொல்வதம்மா
வஞ்சி அவள் பேரழைகை .........."



யாழ் ..

எழுதியவர் : யாழ் (7-Nov-17, 11:27 am)
பார்வை : 102

மேலே