வாழ்த்துவோம் வா
கொழுகொம்பின்றி
படருமா கொடி
ஆதாரம் சாய்ந்தால்
வாழுமா செடி
பரிதவிக்கும் கிளி
பாசத்திற்கு ஏங்கும் குஞ்சுகள்
உறவுக்கரம் நீட்டுவதில்
என்ன தவறு
ஏரி உடைந்தால்
வெள்ள அபாயம்
உள்ளம் உடைந்தால்
மரண அபாயம்
சிதைந்த உள்ளத்தோடு
சிதிலமாகும் பெண்ணுள்ளம்
சிரித்து வாழக்கூடாதா
மனம் பொருந்திய உள்ளங்கள்
மறுமணம் செய்யட்டும்
ஊர்கூடி வாழ்த்தட்டும்
உறவுகள் இணையட்டும்
சமூகம் என்ன சொல்லும்
சடங்குகள் என்ன செய்யும்
தனிமரம் இணைந்தால் தோப்பாகும்
இருமனம் இணைந்தால் குடும்பமாகும்