நீயாகிய நான்
.....நீயாகிய நான்......
புரியாத பார்வைகள் தருகிறாய்
புரியாமல் நானும் தவிக்கிறேன்
எதிர்பாரா உந்தன் காதலில்
எனையே மறந்து குழப்பமடைகிறேன்..
என் அகத்தைக் கொள்ளையடித்து
புதுப்புதுக் கவிதைகள் எழுதிச்
செல்கிறாய்..
எனக்குள் சலனங்கள் விதைத்து
எனையே முழுதாய் களவாடிக்
கொல்கிறாய்...
பார்வைகளால் இருதயத்துள்
இனிமைகளைச் சேர்க்கின்றாய்
தீண்டல்களில் மேனியெங்கும்
காதல் மின்சாரம் பாய்ச்சுகின்றாய்...
மொத்தமாய் உனக்குள்ளே விழுந்து
விட்டேன்..
எனை சத்தமின்றியே உன்னில்
கோர்த்துவிடு...
என் காதல் வெற்றிடங்களை
உந்தன் காதலால் மொத்தமாய்
முழுமைப்படுத்திவிடு...