காதல் பிரிவு
கொஞ்சி கொஞ்சி கரைந்த பொழுதுகள் அன்று
கெஞ்சி கெஞ்சி நீளுதே இரவுகள் இன்று
அஞ்சி அஞ்சி சந்தித்த வேலைகள் அன்று
அல்லோலப்படுதே அந்த சோலைகள் இன்று
மிஞ்சி மிஞ்சி ஊடல் செய்தோம் அன்று
ஊடலெல்லாம் சாடலானது இன்று
அய்யோ,
பிரிவுக்குள் இத்தனை பிரளயமா
துரோகத்தில் இதென்ன புதுரகமா
தனிமையில் அழுவதும் ஒருசுகமா
பிரிவே பிரிவாய் நிரந்தரமா
பிரிந்தால் சேர்வோம் ரகசியமா
சேர்ந்தால் வாழ்வோம் சுதந்திரமா
- அருணன் கண்ணன்