பேராசை கொண்ட நடிகர்கள்
(கலித்துறை)
நாட்டை ஐம்பதாண் டுகூத்தரும் கெடுத்தது போதும்
நாடி நாடியாட் சிப்பிடிக் கவென்பயன் சொல்லும்
நாட்டை யாளவி ழைவதேன் சேர்த்ததுபோ தாதா?
நாட்டு மக்களைச் சுரண்டவும் வேண்டுமோ சொல்லு
சென்ற வருடம ழுதநடி கனுக்கர சியல்ஏன்?
இன்ற வர்க்குத விகரம் நீட்டுவர் யாரோ?
அன்று சங்கமு தவிவரா மல்ஒதுங் கியதேன்?
மன்ற மக்களின் முயற்சியெ டுபடுமா பாரும்
எப்ப டியெப்பொழுது வருவது என்பதைச் சொல்லேன்
எப்ப டியிருக்கு நடிகரும் நழுவிடும் மீனாம்
அப்பா ஆசியு டனொரு நடிகனும் காக்க
எப்பா டுபடுமோ அரசியல் நாடக மும்தான்
தொல்லைச் சள்ளையாய் கொடுக்கிறது ஊடகப் பெட்டி
எல்லை கடந்துபோ கிறதுபு துவரவின் செய்கை
பல்லைக் காட்டுகி றார்புது பகலவன் நடிப்பாய்
கல்லை மக்களும் எறியத யங்குவது ஏனாம்?
கோடி ஆயிரம் கோடிலட் சத்திலே கோடி
தேடித் தட்டிட நடிகரும் வருகிறார் போலும்
ஓடும் சக்கரம் சீர்படுத் தலிவரால் ஆகா
ஆடி யுடைந்தகா லுடனிவர் காப்பரோ நாட்டை
கோடி கள்கொடுத் தப்பட முதலாளிமொட் டையாம்
கோடி யிலெத்தனைக் கோடிகள் மக்களுக்குக் கொடுத்தாய்?
கோடி கள்செல வழித்திருந் தால்கணக்கு காட்டும்
நாடி வந்துபோ டாதிரும் மக்களையும் மொட்டை
--- ராஜப் பழம் நீ ( 08-Nov-2017)