திராவிட மாயை
(ஆசிரியப்பா)
தமிழன் திராவிடன் ஆனது என்று?
தீந்தமிழ் மரபின் தீரனேத் தமிழா
உண்மையும் கலாச்சா ரமறிவா யாநீ?
பாண்டிச் சேரச் சோழனும் ஆண்டியா
முன்சம ணரைமாய்த் ததுபாண்டி சுந்தரன்
முன்பின் கடையேழ் வள்ளலும் தமிழர்
தவறா? சொல்லும் தமிழரே!
தவறிலை தமிழ்நாட் டில்வாழ் தமிழரே!
அரசர் கல்வெட்டுக் குறிப்பாத் திராவிடம்
அயோக்கியர் குறிப்பாம் திராவிடன் சொன்னேன்
ராசரா சேந்திரன் சிவன்தொழுத் தமிழர்
வைணவம் வளர்த்தக் குந்தவை தமிழாம்
உலகம் புகழும் வள்ளுவன் தமிழே
பலநூல் நூற்றப் புலவரும் தமிழரே
கவிச்சக் ரவர்த்தி கம்பனும் தமிழன்
சிவன்சோ தித்தப் பாண்டித் தமிழன்
இவர்க்கு இலக்கிய நூல்ஆ தாரம்
எப்புல வர்திரா விடனென ஒப்பினார்
இப்போ துயோசியும் தமிழரே
தப்பாம் திராவிட மாயைத் தமிழரே!
---ராஜப்பழம் நீ (20-Aug-2017)

