காளையின் வீரத்துடனும் தமிழரின் வீர நடையுடனும்

வளைந்து ஓடிவரும் எம் தமிழ் பொதிகையே,
எங்கள் வயலின் விரிசலை மூடவரும் தென்னாட்டு வைகையே,
உனக்கு வேலிநட்டவர் எவரோ நீயும் கொஞ்சம் கூறேன்,
அன்று நீயும் வற்றினாயே விவசாயிகளின் இழப்பை தாங்கம்டியாமல்,
இன்று எதற்க்காக வற்றினாய்,
இன்று யாரின் இழப்பை உன்னால் தாங்கமுடியவில்லை என்று கூறேன்,
நீ வற்றி எங்கள் தமிழை தாழ்த்திடாதே,
காளைியின் வீரம் கொண்டு உடைத்தெரிந்து வா,
ஏழையின் தாகம் தணிக்க,
சீர்கொண்டு எழுந்துவா தமிழரின் வீர நடைபோட்டு,
எங்கள் தமிழகளின் ஒற்றுமை உன் சலசல என்ற தமிழ் பிறப்பில் உள்ளது,
நீ வேலிதாண்டி வந்து எங்கள் தமிழர்களை ஒற்றமைபடுத்து,
உன்னை வேலிநட்டு எங்கள் விவசாயத்துக்கு தடை போடும் கறை எதுவோ,
நீயும் கொஞ்சம் கூறேன் அக்கறையை நாங்கள் போக்கிறோம்,
இங்கு தமிழர்களை பிரித்து சாதியைளர வைகிராயே,
வைகியே இதுவும் நயமாகுமோ,
இங்கு விவசாயம் செழித்தால் தமிழ் ஆணிவேர் விட்டு வளரும் என்பது உனக்கு தெரியாமல் போயிட்ரே ,
வைகியே மீண்டும் வா வெற்றி நடை போட்டு,
காளையின் வீரத்துடனும் தமிழரின் வீர நடையுடனும் ,
எங்கள் தமிழர்களின் ஒற்றுமைக்கு.

எழுதியவர் : மு.சண்முகநாதன் (8-Nov-17, 2:47 pm)
பார்வை : 84

மேலே