இந்த ஜோக்குக்கு நா பொறுப்பில்லீங்கோ
இந்த ஜோக்குக்கு நா பொறுப்பில்லீங்கோ!
செம்ம சிரிப்பு ...!!!
நம்மாளு ஒருத்தரு சும்மா இருக்க முடியாம...
குரலுக்கு கட்டுப்படும்
ஆட்டோமேடிக் கார் ஒண்ணை விலைக்கி வாங்கினாரு....
அந்த காரு இவரு
சொல்றதெல்லாம் கேக்கும்....
ஒரு சின்னதப்பு கூட இல்லாம ரொம்ப கரெக்ட்டா
செஞ்சு முடிக்கும்...
இதால அவருக்கு
ரொம்ப ரொம்ப
பெருமை...
ஒரு நாள் ...
அவரோட மனைவி, "என்னங்க
என்னால இன்னைக்கி பள்ளிக்கூடம் போக
முடியல.. உங்க காரை அனுப்பி நம்ம பசங்கள
கூட்டிட்டு வரசொல்லுங்க..."
அப்படின்னு
சொன்னாங்க...
இவரும் தன்னோட
காரை விவரம் சொல்லி
அனுப்பி வச்சாரு...
போய் ரொம்ப நேரம் ஆச்சு...
கார் திரும்பி
வரவே இல்லை...
இவர் வெயிட் பண்ணி
பார்த்திட்டு
வெறுத்துப்போய் போலீஸ்கிட்ட
போலாமான்னு கிளம்பும்போது ...
வந்து நின்னுச்சு இவரு கார்...
புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் வெளிய
வந்து பார்த்தா...
கார் புல்லா பசங்க...
"இந்தாங்க உங்க புள்ளைங்க.." அப்படின்னு சொல்லுச்சி கார்...
கார்ல... அவங்க ஹவுஸ் ஓனரோட ரெண்டு
பொண்ணுக.... அவரு மனைவியோட
பெஸ்ட் பிரண்டோட பையன்...அவரோட
செக்ரெட்டரியோட
பொண்ணு...
பக்கத்துக்கு வீட்டுக்காரவங்க பசங்க ரெண்டு
பேருன்னு... பார்த்ததும் அவரோட மனைவிக்கு வந்திச்சே கோபம்...
"இவங்க எல்லாம் உங்களோட
குழந்தைகளா..... ?! சொல்லுங்க....!
இதுக்கு என்ன அர்த்தம்...?"
அப்படின்னு ரொம்ப கோவமா
கேட்டாள் ...
அந்த புருசன்காரன் ரொம்ப
அமைதியா கேட்டான்....
"அதெல்லாம் இருக்கட்டும்டி
...
நம்ம குழந்தைகள் எங்க யாரையும் கார்ல
காணோம்.....?" ...
😳😳😳😳😳😳.