அதான் எல்லாருக்கும் நல்லது

மக்கள் : சார் சார் எங்களுக்கு ஆபத்து எங்கள காப்பாத்துங்க....

சார் : என்ன ஆபத்து சொல்லுங்க

மக்கள் : சார் அது வந்து, வந்து
சார் : என்ன? வந்து போய் சொல்லுங்க

மக்கள் : நாங்க இருக்குற இடத்துல தண்ணி வந்துடிச்சி

சார் ; அடடா சந்தோச பட வேண்டிய விசயம் தானே

மக்கள் : ஐயோ சார் எங்க வீட்டு குழாய்ல தண்ணி வந்தத சொல்லல

சார் : அப்புறம்
மக்கள் : நாங்க குடிஇருக்குற பகுதியில் வெள்ள நீர்(மழை நீர்) வந்துடிச்சி

சார் : அது அந்தமாறி வர வாய்ப்பு இல்லயே

மக்கள் : அப்படித்தான் நாங்களும் நெனச்சோம் ஆனா தண்ணி வந்துடிச்சே

சார் : ஆமா நீங்க எல்லாம் எங்க வீடு கட்டி இருக்கீங்க??????????

மக்கள் : போன வருசம் தண்ணி இல்லாம காஞ்சி போச்சி இல்ல ஏரி

சார் : ஆமா

மக்கள் : அங்க தான் சார் வீடு கட்டினோம்

சார் : ஓஓஓஓஓ அங்கதானா

மக்கள் : இப்ப பாத்தா தண்ணி வந்துடிச்சி

சார் : அடப்பாவி மக்களே தண்ணி போற ஏரியாவில (ஏரியில) நீங்க வீடு கட்டினா அந்த தண்ணி எங்க போகும்???

மக்கள் : இப்ப நாங்க என்ன பன்றது???

சார் : இப்பவும் ஒன்னும் இல்ல. உங்க வீடு ஏதும் தண்ணில மூழ்கி போல. தண்ணி வந்து தங்குற அதோட வீட்ட அதுக்கிட்ட விட்டுட்டு நீங்க ஒரு நல்ல மேட்டு பகுதி உள்ள இடத்துல வீடு கட்டிக்கோங்க .
அதான் எல்லாருக்கும் நல்லது....

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (8-Nov-17, 7:40 pm)
பார்வை : 449

சிறந்த நகைச்சுவைகள்

மேலே