ஆசிசு

ஆசிசு, ஆசிசு. எங்கடா போயிட்ட?
😊😊😊😊😊😊
என்னங்க பாட்டிம்மா ஆசிசு, ஓசிசு -ன்னு உளறீட்டீருக்கறீங்க?
😊😊😊😊😊
அடியே பூங்கொடி, என்னோட வயசு 90. என் ஞாபக சக்தி உன்னமாதிரி பத்துப்பேரோட நினைவாற்றலையே மிஞ்சும்டி. நான் உளறரேனா? ஏண்டி தமிழ்ல பேருக்குப் பஞ்சம் வந்த மாதிரி எல்லாரும் பிள்ளைங்களுக்கு வாயில நொழையாத, அர்த்தம் தெரியாத இந்திப் பேருங்கள வச்சிடறாங்க. அதையெல்லாம் என் வாயால உச்சரிக்க முடியாதுடி.
😊😊😊😊
சரி. எதுக்கு ஆசிசுன்னு சொன்னீங்க? யாரைக் கூப்பிட்டீங்க?
😊😊😊😊😊😊
ஆவடில இருக்கற எம் பேத்தி பொன்மணியோட பையன் பேருதான்டி ஆசிசு.
😊😊😊😊😊
ஓ... ஆவடி அக்கா பையனா? அவம் பேரு ஆஷிஷ் பாட்டிம்மா.
😊😊😊😊
நா மட்டும் என்னனு கூப்பிட்டேன். ஆசிசு -ன்னுதான்டி கூப்பிட்டேன்.
😊😊😊😊😊😊😊
நல்லவேளை என்னோட அம்மாவும் அப்பாவும் எனக்கு ஸ்வாதின்னு வச்ச பேர பேராசிரியர் நன்னன் அவர்கள் தொலைக் காட்சில தமிழைப் பத்தி தொடராகப் பேசினதைக் கேட்டதுக்கப்பறம் எம் பேர 'பூங்கொடி' -ன்னு மாத்திட்டாங்க. அந்த ஸ்வாதிங்கற பேர நீங்க சுவ்வாதின்னு சொல்லுவீங்க. அம்மாடியோவ், நாந் தப்பிச்சிட்டேங்க பாட்டிம்மா.
😊😊😊😊😊
படிச்சவங்க படிக்காதவங்க யாருக்குமே தாய்மொழிப் பற்று இல்லடி.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க. திரைத் தமிழைத் தவிர்ப்போம். கற்றவர்க்குரிய நல்ல தமிழில் எழுதுவோம். மொழிக் கலவையைத் தவிர்ப்போம்.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●

எழுதியவர் : மலர் (8-Nov-17, 9:36 pm)
பார்வை : 230

மேலே