முந்திரி பிடிக்காதா

அமெரிக்காவில் வசிக்கும் மகனை சென்று பார்க்க பாஸ்போர்ட் விண்ணப்பம் கொடுத்திருந்தார் அந்த வயதான பெண்மணி .

வெரிஃபிகேஷனுக்காக அவரை சந்திக்க வந்தார் லோக்கல் போலீஸ் அதிகாரி .

அந்த அம்மையார் ஊஞ்சலில் அமர்ந்திருந்தார் . அவர் எதிரில் ஒரு தட்டு நிறைய முந்திரிப்பருப்பு .

" தனியாவா இருக்கீங்க ? அதான் பிள்ளை அமெரிக்கா கூட்டிட்டு போரானா?"

" ஆமாம் கொஞ்ச நாளைக்குத்தான் . அப்புறம் திரும்பி வந்துடுவேன் "

" நான் கொஞ்சம் முந்திரி பருப்பு சாப்பிடலாமா ?"

"தாராளமா எடுத்துக்கோங்க என் பிள்ளை அமெரிக்காலேருந்து அனுப்பியது "/

போலீஸ்காரர் கொஞ்சம் தாராளமாகவே எடுத்து சாப்பிட்டார் .
" உங்களுக்கு முந்திரி பிடிக்காதா அம்மா "?
.
.
.
.
.

.
" ரொம்ப பிடிக்கும் ஆனா கடிக்க முடியாது. அதைச் சுத்தி இருக்கற சாக்கலேட்டை மட்டும் சப்பி சாப்டுட்டு முந்திரியை அப்படியே வச்சுடுவேன் "😊😊😊😀😀

எழுதியவர் : (11-Nov-17, 6:01 pm)
பார்வை : 305

சிறந்த நகைச்சுவைகள்

மேலே