காதல் நினைவுத்தாக்குதல்
கடற்கரை காற்றே
கரைவரை வந்திடு
கரையினில் வந்து என்
கவலைகள் கொன்றிடு
கனநேரம் நானிங்கு இருந்தாலும்
நினைவாலே கண்கள் குளமாகும்
தெருவோரம் தேங்கிய
மழைநீரில் எனைக்காட்டி
உன்னை விரட்டினேன்
எனை இன்று ஏதும் செய்யாமல்
உனைத்தேட என்னை முடுக்கினேன்
இடப்புற இதயம்
எதனால் ஆனதோ ஏதோ
சிறு கண்ணீர் துளிக்கெல்லாம்
கரைந்து மடிய நினைக்கிறது
உன் பிரிவு எனைத்தாக்கவில்லை
உண்மை,
உன் நினைவுதாக்குதலில்
என்னால் மீளஇயலவில்லை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
