அது உனக்கான இடமன்று

வீடு வந்துசேர்ந்திடு மனமே
அது உனக்கான இடமன்று;
உடல் உணர்வின்றி தவிப்பது
உயிருக்கு வலிக்கிறது;
கட்டியிழுத்து வந்திடலாம்
கடிவாளம் உனக்கேது;
கேள்,
நிகழ்கால போதைகள்
கடந்தகாலம் நினையாது;
கடந்தகாலம் நினைக்க
மறுக்கும் இக்கலியில்
நிகழ்கால போதைகளின்
பிரிதல்கள் ஆனந்தமதானே
தவிர்த்து வருந்திடத்தேவையில்லை.
கொண்டாடும் நேரமிது
இனி கொண்டாடு.