நீ நானாவாயா நட்சத்திரமே
அதீத வலி
அதன் அர்த்தம் புரியவில்லை
என் இடப்புற இதயம்
ஏதேதோ சொல்ல துடிக்க
கவனிக்காமல் கடந்திடவே நினைக்கிறன்
தனிமை விரும்பும் இதயம்
இன்று ஏனோ
துணை தேடி துடிக்கிறது
இன்றைய மாலை நேரங்களை
எப்படி கடப்பது தெரியவில்லை
தொடர்ந்தால்..
ஒன்று இதயம் வெடித்து சிதறும் இல்லை கூராயுத முனைகொண்டு
என் கைகளே என்னை கிழித்தெறியும்
இயற்கையுடன் மணிக்கணக்கில் பேசும் உனக்கு
இன்றைய வலிநிவாரணியாக அது
அமையாதது ஏனோ
நினைத்தாலே அழைக்கவரும் நட்சத்திரங்கள் இன்று
அதன் கைகளை இன்னும் நீட்டவில்லையே ஏனோ
நான் நானாக இல்லை
சிலகாலமாக உன்னை கவனிக்கவில்லை
உண்மைதான்
காமத்தின் போதையில் அலைந்துவிட்டேன்
ஹார்மோன்களுக்கு காதல் சொல்லித்தரும் முயற்சியில் தோற்றுவிட்டேன்
வேதனை கடக்க
இன்று ஒருநாள் மட்டும்
நீ நானாக வேண்டும்
உன் விரல்களின் பரிசங்களால் மட்டுமே இந்நிலையை மாற்றமுடியும்.
நீ நானாவாயா நட்சத்திரமே.