Magalir Thinam...

மகளிரின் சக்தி
மகத்தானது தான்...

சாதனைப் பெண்ணாக
கல்பனா சாவ்லா...

கள்ளிக் காட்டில்
சுள்ளி பொறுக்கும்
கல்பனாக்கள் எத்தனை..?

அன்பின் உருவமாக
அன்னை தெரசா.,

அன்பிற்காக ஏங்கும்
அனாதைகளை ஆதரிக்கும்
தெரசாக்கள் எத்தனை..?

பட்டியலில் அடக்கினோம்
சாதனை மகளிரின் பெயர்களை../

பட்டியலில் அடங்காமல் நீள்கிறது
சாதிக்கத் துடிக்கும் மகளிரின் பெயர்கள்...

எழுதியவர் : Sureka (21-Jul-10, 12:10 pm)
பார்வை : 15832

மேலே