தமிழக மீனவர் வாழ்க்கை

கோட்டை கோபுரத்தை கண்டதில்லை ,
கோழி கூப்பிட எந்திததுண்டு ,

என்றுமே , இயற்கையை கண்டு அஞ்சியது இல்லை ,
இன்று, இலங்கையை கண்டு அஞ்சியது உண்டு ,


வீசிய வலையில், மீன் கிடைக்காமல் திரும்பியதில்லை ,
கிடைத்த மீனை கொண்டே ,என் வீட்டில் அரிசி வெந்ததுண்டு ,


திரும்பி வருவேனோ , என்று ஜோசியத்தை நம்பியது இல்லை ,
நான் வணங்கும் கடல் தேவதையை நம்பியது உண்டு ,என் வாலிப பசிக்கு , கன்னிகளுக்கு வலை வீசியது இல்லை ,
என் வயுற்று பசிக்கு கடலில் வலை வீசியது உண்டு ,


மீனு தின்ன உடம்பு ,மண்ணில் வீணாக போனதில்லை ,
பிறருக்கு பயனாக என்றுமே வாழ்தததுண்டு

என் வியர்வை துளி ,நிலத்தில் பட்டதில்லை,
ஆனால், எங்கள் வியர்வை துளி ,கடலில் பட்டு கடல் நீர் உப்பானதுண்டு

நாங்கள் யாருக்கும் துரோகம் நினைத்ததில்லை ,
ஆனால், தொழிற்சாலைகளின் கழிவுகள் கடலில் கலந்ததுண்டு..கான்வென்ட் பிள்ளைகள் போல பணம் கொடுத்து தொழிலை கற்றதில்லை,
பிறக்கும்போதே நீச்சல் அடித்து பழகியது உண்டு ..

என் வீட்டு பிள்ளைகள் கர்நாடக சங்கீதத்தை அறிந்ததில்லை,
ஆனால், கடலின் ஆழத்தை அறிந்ததுண்டு ..

நாங்கள் கணினியை கண்டிருக்கவில்லை ,
ஆனால் , கலங்கரை விளக்கத்தை கண்டதுண்டு .

இதுவரை வாழ்கையில் கரை சேர்ததில்லை ,
ஆனால் , நிதமும் கரை சேர்வதுண்டு ...

எழுதியவர் : Muthuvel.A (21-Jul-10, 12:34 pm)
பார்வை : 2927

மேலே